Posts

Showing posts from 2017

குவிந்தா வெளிச்சவீடு(Queen's Tower)

Image
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து இலங்கையானது இந்தியாவுடனும் கிரேக்கம்> ரோம்> அராபியா> மற்றும் தென் கிழக்காசியா> கிழக்காசியா போன்ற நாடுகளுடனும்  கொண்ட உறவின் காரணமாக கடல் வழித் தொடர்புகளும் வர்த்தகப் பண்பாட்டு உறவுகளும் அதிகரிக்கலாயின. இத்தொடர்புகளை பாளி> சிங்கள> தமிழ் இலக்கியங்களும் பிறநாட்டார் குறிப்புக்களும்> கடற்கரை நகரங்கள்> வர்த்தக மையங்களில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் பொருட்சான்றுகளும் ஆதாரப்படுத்துகின்றன. அக்காலத்தில் கடல்வழித் தொடர்புகளைப் பேணவும் கடல்கடந்த வணிகத்தில் ஈடுபடுவதற்கும் படகு> தோணி> பாய்மரக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. இவை திசைமாறாது குறிப்பிட்ட இடத்தை அடைவதற்காகத் துறைமுகத்தின் ஓர் குறிகாட்டியாக வெளிச்சவீடு காணப்படுகிறது. இவ்வகையில் கடல் கடந்த நாடுகளைக் கைப்பற்றல், வர்த்தகம் போன்ற நடவடிக்கைளுக்காக கி.பி 16ஆம் நூற்றாண்டின் பின்னர் ஐரோப்பியராட்சி இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. இதனால் நீண்ட பாரம்பரிய மக்களது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையமாக விளங்கிய நெடுந்தீவும் ஐரோப்பியராட்சிக்குட்பட்டது. இவ்வாட்சியாளர்களில்  ஒ...

புறாக்கூடு

Image
நெடுந்தீவில் ஒல்லாந்தரது ஆட்சியைச் சிறப்பாக அடையாளப்படுத்தும் ஐரோப்பியர்கால மரபுரிமைச்சின்னங்களில் இன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குவது பறவைகள் சரணாலயம் எனப்படும் புறாக்கூடு ஆகும். இவ்வமைப்பானது ஒல்லாந்தராட்சி நடைபெற்ற இலங்கையில் அவர்களால் கட்டமைக்கப்பட்ட கட்டட அமைப்புக்களில் நெடுந்தீவைத் தவிர வேறு எந்தப் பகுதிகளிலும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் தான் ஒல்லாந்தர்களின் கேந்திர முக்கியத்தும் வாய்ந்த மையங்களில் நெடுந்தீவானது நிர்வாகம், இராணுவக்கட்டமைப்பு போன்ற விடயங்களைப் பற்றி ஏனைய பிரதேசங்ககளுடன் தொடர்பு கொள்வதற்கான மையமாக இது விளங்கியதென்பதனையே எடுத்துக்காட்டுவதாக உள்ளது.  அந்தவகையில் இப்புறாக்கூடானது நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பணிமனையின் பிரதான கட்டடத்துக்குத் தெற்கே மிகக்கிட்டிய தொலைவில் அமைந்துள்ளது. ஒல்லாந்தர் காலத்தில் குறிப்பாக கி.பி 1602 தொடக்கம் கி.பி 1796 இற்கிடைப்பட்ட காலப்பகுதியில் கட்டப்பட்டதாகச் சான்றுகள் கூறுகின்றன. இது கூழாங்கற்களையும், முருகைக்கல்லையும், சுதையையும், மரத்தையும் பயன்படுத்தி அமைக்கப்பட்டவையாகும். இக்கூடு காணப...

நெடுந்தீவுக் கோட்டை(Delft Fort)

Image
போர்த்துக்கேயர் நெடுந்தீவைக் கைப்பற்றியதும், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே கேந்திர ஸ்தானமாக விளங்கியமையாலும் தமது பாதுகாப்பை மற்றும் கடல் போக்குவரத்துக்களைக் கண் காணிப்பதற்கும், தமது நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும் கோட்டையை அமைத்தனர். இவ்வாறாக அமைக்கப்பட்ட கோட்டைகளில் இன்றும் போர்த்துக்கேயரது ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்வது நெடுந்தீவின் மத்தியில் தற்போதைய வைத்தியசாலைக்கு அண்மையில் கடற்கரைப் பக்கமாக அமைக்கப்பட்டிருக்கும் சிதைவடைந்த நிலையில் காணப்படும் கோட்டையாகும். இக்கோட்டை ஒல்லாந்தர்களினது என்றும் கூறப்படுகிறது. எனினும், ஒல்லாந்தர்கள் இங்கு கோட்டை கட்டியதற்கான ஆதாரங்கள் ஒல்லாந்தர்களது ஆவணங்களில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.   மேலும், நெடுந்தீவு மக்களிடையே ஐதீகக் கதையாக நம்பப்படும் வெடியரசன் வரலாற்றுடன் தொடர்புடைய படையெடுப்பாளரான மீகாமன் கட்டிய கோட்டையே இது என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது. எனினும், நெடுந்தீவின் கடற் கரையில் போர்த்துக்கேயர் காலத்தில் டிடழஉம hழரளந இருந்ததற்கான குறிப்புக்கள் காணப்படுகின்றது. எனவே, இதுதான் போர்த்துக்கேயர் காலத்தில் கட்டப்பட்...

பழுகாமத்தில் வாழும் “நெடுந்தீவாா்” எனும் சாதியினா் பற்றி ஒரு பாா்வை

Image
கொக்குபீச்சை இனத் தொல்லியல்(Ethno Archaeology) என்பது சமகாலத்தில் வளர்ச்சியடைந்து வரும் ஒரு துறையாகவும் தொல்பொருளியில் செயன்முறைகளை ஆராய்வதற்கான தகவல் வழங்கும் ஒரு துறையாகவும் காணப்படுகின்றது. இனத்தொல்லியலானது மனிதனுடைய உறவுமுறைகள் மற்றும் அளவிடக்கூடிய மாற்றங்கள்,அவர்களுடை சூழல், கண்ணுக்கு புலப்படாத அல்லது  எளிதில் அளவிட முடியாத சமூகமற்றம் கருத்தியல் மாற்றங்கள் பற்றி கவனத்தில் கொள்கின்றது. இனவியல் சார்ந்த ஆய்வின் மூலமாக இன அடிப்படையை மக்கள் வேறுபட்டவர்கள் என்பதை விட பண்பாட்டு அடிப்படையிலே இன வேறுபாடு தோன்றியதென்ற புதிய பண்பாட்டுச்சூழல் உருவானது. ஏங்கெல்லாம் இவ்வாய்வுக்கு தேவையான மனிதனுடைய எச்சங்கள் காணப்படுகிறதோ அவ் ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு வயது, பால்வேறுபாடுஇ மக்களது எண்ணிக்கை, சமகால மக்கள் சராசரியாக வாழ்கின்ற காலமஇ; நோய்கள்இ இயற்கை அனர்த்தங்கள்இ சமூக உறவுகள், பண்பாடுகள் போன்றவற்றை கண்டறிய உதவுகின்றன. அதுமட்டுமன்றி நவீன மரபணுபரிசோதனை முறையும் இவ்வாய்வில் இணைந்து பண்டைய மக்கள் தொடர்பான பல்வேறு விடயங்களை வெளிப்படுத்த இனத்தொல்லியலுக்கு உதவுகின்றது. இவ்வாய்வில் இனத் தொல்லி...

நெடுந்தீவிலுள்ள குதிரைகள்

Image
யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வடமேற்கே அமைந்துள்ள சப்த தீவுகளில் பெரிய தீவாக உள்ளதும், ஆழ்ந்த அலை கடல்களின் மத்தியில் முத்தாக முகிழ்ந்திருப்பதே நெடுந்தீவாகும். இங்கு வரலாற்றுக்காலம் தொட்டு ஐரோப்பிய காலனித்துவத்தை அடையாளப்படுத்தும் பல மரபுரிமைச் சின்னங்களினைக் கொண்ட தீவாகக் காணப்படுகின்றது. அந்தவகையில் நெடுந்தீவில் ஐரோப்பிய காலனித்துவத்தின் சான்றுகளை வெளிப்படுத்தும் மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றாக நெடுந்தீவின் குதிரைகள் காணப்படுகின்றன. இக் குதிரைகள் இன்றும் ஒல்லாந்தர்களின் ஆட்சி நெடுந்தீவில் நிலவியதையே புலப்படுத்துவதாக உள்ளது. நெடுந்தீவுக்கு குதிரைகள் ஒல்லாந்தராட்சி இங்கு நடைபெற முன்னரே வடஇலங்கையுடன்   வர்த்தக நடவடிக்கையினை மேற்கொண்ட அரேபியர்கள் இங்கு தங்கியிருந்த போது முதன் முதலாகக் கொண்டுவரப்பட்டது என்ற கருத்தும் இத்தீவு மக்களிடையே காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி தென்னிந்தியாவில்  மணிவாசகரின் காலத்தில் அவர் குதிரை வாங்கவந்த இடம் இவ்நெடுந்தீவிலுள்ள பெரியதுறை என்ற கருத்தும் இன்று நிலவுகின்றது. ஏனெனில் நெடுந்தீவு தமிழக இராமேஸ்வரத்திற்கு அண்மையில் அமைந்துள்ளதனால் நெடுந்தீவிற...

வட இலங்கையின் தொல்லியல் சுற்றுலா மையங்களில் ஒன்றான தேக்கம் அணைக்கட்டின் சிறப்பு

Image
சமகாலத்தில் இலங்கையின் தேசிய வருமானத்தை ஈட்டித்தரும் துறைகளில் ஒன்றாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது. இவற்றுள் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை அதிகமாக கவரும் அம்சமாக இயற்கை  மரபுரிமைச் சின்னங்களும் தொல்லியல் மரபுரிமைச் சின்னங்களும் காணப்படுகின்றன. இவ்வாறனதொரு பின்னணியிலே வன்னியின் இயற்கை அமைப்பு, காட்டுவளங்கள், கனிமங்கள், இயற்கையாக ஊற்றெடுத்துப் பாயும் அருவிகள், வரலாற்றுப் பழைமை வாய்ந்த பிரதேசங்கள், குளங்கள் ,கால்வாய்கள், கலிங்குகள், அணைக்கட்டுக்கள், ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்ட தொங்குபாலங்கள் என்பன இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் வன்னிப் பிரதேசத்தையும் இணைத்துக்கொண்டது. சுற்றுலாத்துறை பயணிகளை அதிகம் கவரும் பிரதேசமாகவும் பல தொல்லியல் வரலாற்றுச் சுவடுகளையும் கொண்ட மையமாக பறையனாளங்குளம் என்ற கிராமத்திற்கு அருகிகே அருவி ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்ட தேக்கம் அணைக்கட்டு அமைந்துள்ளது. இது காணப்படும் பிரதேசம் அணைக்கட்டின் பெயராலே தேக்கம் என சிறப்பாக அழைக்கப்படுகின்றது. பண்டைய இலங்கையின் தலைசிறந்த நீர்ப்பாசன முறையை உலகத்தின் எந்தவொரு புராதன நாகரிகத்துடனும் ஒப்பிடமுடியாது....