குவிந்தா வெளிச்சவீடு(Queen's Tower)
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து இலங்கையானது இந்தியாவுடனும் கிரேக்கம்> ரோம்> அராபியா> மற்றும் தென் கிழக்காசியா> கிழக்காசியா போன்ற நாடுகளுடனும் கொண்ட உறவின் காரணமாக கடல் வழித் தொடர்புகளும் வர்த்தகப் பண்பாட்டு உறவுகளும் அதிகரிக்கலாயின. இத்தொடர்புகளை பாளி> சிங்கள> தமிழ் இலக்கியங்களும் பிறநாட்டார் குறிப்புக்களும்> கடற்கரை நகரங்கள்> வர்த்தக மையங்களில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் பொருட்சான்றுகளும் ஆதாரப்படுத்துகின்றன. அக்காலத்தில் கடல்வழித் தொடர்புகளைப் பேணவும் கடல்கடந்த வணிகத்தில் ஈடுபடுவதற்கும் படகு> தோணி> பாய்மரக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. இவை திசைமாறாது குறிப்பிட்ட இடத்தை அடைவதற்காகத் துறைமுகத்தின் ஓர் குறிகாட்டியாக வெளிச்சவீடு காணப்படுகிறது. இவ்வகையில் கடல் கடந்த நாடுகளைக் கைப்பற்றல், வர்த்தகம் போன்ற நடவடிக்கைளுக்காக கி.பி 16ஆம் நூற்றாண்டின் பின்னர் ஐரோப்பியராட்சி இலங்கையையும் விட்டுவைக்கவில்லை. இதனால் நீண்ட பாரம்பரிய மக்களது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையமாக விளங்கிய நெடுந்தீவும் ஐரோப்பியராட்சிக்குட்பட்டது. இவ்வாட்சியாளர்களில் ஒல்லாந்தர்