மந்திரிமனை
manthirimanai மந்திரிமனை என்பது இலங்கையின் வடபகுதியில் தமிழரசர் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ள அரிய நினைவுச்சின்னங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரில் தமிழரசர் காலத்தோடு சம்பந்தப்படும் ஒரு கட்டிடமாகும். இது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் சட்டநாதர் கோயில் பகுதியில் அமைந்துள்ளது. இது கம்பீரமான தோற்றத்தையும், வேலைப்பாடுகளையும் உடைய கட்டிடமாகும். போர்த்துக்கேயரிடம் யாழ்ப்பாணம் வீழ்வதற்கு முன் அக்கால அமைச்சர் ஒருவரின் இருப்பிடம் இதுவெனக் கூறப்படுகிறது.